Homeசெய்திகள்இந்தியாசந்திரபாபு உட்பட 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு

சந்திரபாபு உட்பட 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு

-

சந்திரபாபு உட்பட 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர்  சந்திரபாபு உள்பட 20க்கும் மேற்பட்டோர் மீது வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் எதிர்கட்சி தலைவருமான சந்திரபாபு  கடந்த வாரம் சித்தூர் மாவட்டம் புங்கனூரில் சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக ரோட் ஷோ மேற்கொண்டார். அப்போது அன்னமய மாவட்டம் தம்பல்லப்பள்ளி தொகுதிக்குட்பட்ட   அங்கல்லுவில் சந்திரபாபு பேசி கொண்டுருந்தபோது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் சிலர் அங்கு வந்ததால் தெலுங்கு தேசம் கட்சியினரை தூண்டிவிட்டு சந்திரபாபு பேசியதாகவும் இதனால் ஏற்பட்ட வன்முறையை தடுக்க சென்ற போலீசார் பலரை தாக்கி காயப்படுத்தியதோடு போலீசார் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
இந்த வழக்கில் தெலுங்கு தேச கட்சி தொண்டர்களை வன்முறை செய்யும் விதமாக தூண்டிவிட்டு பேசியதாக ஏ 1 சந்திரபாபு, ஏ2 குற்றவாளியாக  முன்னாள் அமைச்சர் தேவிநேனி உமா உள்பட 20 க்கும் மேற்ப்பட்டோர் மீது முடிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

MUST READ