
ராஜஸ்தான் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
“ஹேலோ சுற்றுப்பாதையை நோக்கி செலுத்துவதற்கான பணிகள் வெற்றி”- இஸ்ரோ தகவல்!
பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு, கடந்த அக்டோபர் 02- ஆம் தேதி அன்று சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்திலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அந்த மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் நேற்று முன்தினம் (அக்.06) அறிவித்திருந்தார்.
“இஸ்ரேல் மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது”- பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்!
சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னர், இடஒதுக்கீட்டில் அதற்கேற்ப ஒதுக்கீடு செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அரசாணையை, ராஜஸ்தான் மாநில சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை வெளியிட்டுள்ளது. அதில், மாநிலத்தில் உள்ள குடிமக்களின் சாதி, சமூகம், பொருளாதாரம் மற்றும் கல்வி நிலை தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், அதற்கான பணிகள் விரைவில் தொடங்கவிருப்பதாகவும் ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்துள்ளது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து- மத்திய அரசு கடிதம்!
இன்னும் ஒரு சில மாதங்களில் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சியின் இத்தகைய அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.