
காவிரி நீர் தொடர்பான வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வை உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஹிஜாப் அணிந்துசெல்லத் தடையில்லை எனும் அறிவிப்பை வெளியிடுக- சீமான்
காவிரி விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்கறிஞர்கள் உமாபதி, குமணன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், தமிழ்நாட்டிற்கு எஞ்சியிருக்கும் காலத்திற்கு மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய நீர் குறித்த உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்துவதை உறுதிச் செய்ய, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, காவிரி விவகாரம் தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள புதிய அமர்வு அமைக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், புதிய அமர்வு அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.
‘அனைத்துக் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் அழைப்பு’!
அதன்படி, காவிரி நீர் தொடர்பான வழக்கை விசாரிக்க, உச்சநீதிமன்ற நீதிபதிகளான பி.ஆர்.கவாய், நரசிம்மா, பி.கே.மிஸ்ரா அமர்வு விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 25- ஆம் தேதி காவிரி வழக்கை புதிய அமர்வு விசாரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.