Homeசெய்திகள்இந்தியாஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

-

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய கேபினட் அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கிழ் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக 50 சதவிகிதத்தை உறுதிசெய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தின் படி 25 ஆண்டுகள் பணிபுரிந்த மத்திய அரசு ஊழியர், ஓய்வுபெற்ற பின் கடைசி ஓராண்டில் பெற்ற சராசரி அடிப்படை சம்பளத் தொகையில் 50 சதவிகிதம் ஓய்வூதியமாக வழங்கப்படும். இதேபோல், மத்திய அரசு ஊழியராக 10 ஆண்டுகள் பணியாற்றிவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 10,000 ஓய்வூதியத் தொகை கிடைக்கும். மேலும் மத்திய அரசு ஊழியர் உயிரிழந்துவிட்டால், அவரது குடும்பத்திற்கு, அவருக்கு கடைசியாக வழங்கப்பட்ட ஓய்வூதியத் தொகையில் 60 சதவிகிதம் ஓய்வூதியமாக வழங்கப்படும்.

2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் அமலாக உள்ள புதிய ஓய்வூதியத்திட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய கேபினட் அமைச்சரவை கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தால் சுமார் 23 லட்சம் மத்தி ய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள். இதனால் மத்திய அரசு பணியாளர்கள் தேசிய ஓய்வூதியத் தி ட்டம் அல்லது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

MUST READ