Homeசெய்திகள்இந்தியாபுதுச்சேரி மாநில பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்

புதுச்சேரி மாநில பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்

-

புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தல் குறுக்கிட்டதால், புதுவை சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக 5 மாத செலவினங்களுக்கு இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் தாக்கல் செய்தார். நாடாளுமன்ற தேர்தல் முடிந்து, மாதிரி நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டது.

புதுச்சேரி மாநில பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்

இதையடுத்து முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. கடந்த மாதம் 18ம் தேதி மாநில அரசின் திட்டக்குழு கூட்டம் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் தலைமை செயலகத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில் அரசு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டுக்கு ரூ.12 ஆயிரத்து 700 கோடி பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டம் தயாரிக்கப்பட்டது. புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசின் அனுமதி பெற்றே பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும்.

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை – வைகோ கண்டனம்

இதற்கான கோப்பு மத்திய அரசின் நிதி, உள்துறை அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை பட்ஜெட்டுக்கான அனுமதி கிடைக்கவில்லை. இதனிடையே இந்தமாத 3ம் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு அனுமதி கிடைக்காததால் புதுவை சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய காலதாமதமாகியது. இந்நிலையில் புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

MUST READ