ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
“ஜி20 உச்சி மாநாடு வளர்ச்சிக்கு புதிய பாதையை வகுக்கும்”- பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்!
திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை, நந்தியாலா பகுதியில் வைத்து சி.ஐ.டி. காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் சந்திரபாபு நாயுடுவை அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர், அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்தியா வந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
சந்திரபாபு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆந்திராவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.