ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியதை அடுத்து, ராஜமுந்திரி சிறையில் இருந்து 53 நாட்களுக்கு பிறகு சந்திரபாபு நாயுடு வெளியே வந்தார்.
அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!
ஆந்திராவில் திறன் மேம்பாட்டுத் திட்ட முறைகேட்டில், அந்த மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பிணைக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஆந்திர மாநில உயர்நீதிமன்றம், மருத்துவக் காரணங்களை மேற்கோள்காட்டி, சந்திரபாபு நாயுடுவிற்கு நான்கு வாரங்கள் இடைக்கால பிணை வழங்கியது.
அத்துடன், நவம்பர் 28- ஆம் தேதிக்கு முன் சந்திரபாபு நாயுடு சிறைக்கு திரும்ப வேண்டும் என்றும் நீதிபதி ஆணையிட்டார். இதைத் தொடர்ந்து, ராஜமுந்திரி சிறையில் இருந்து வெளியே வந்த சந்திரபாபு நாயுடுவிற்கு அவரது குடும்பத்தினர், தெலுங்கு தேசம் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு!
அத்துடன், மாநிலம் முழுவதும் கட்சியினர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, சந்திரபாபு நாயுடு மீது ஆந்திர காவல்துறை புதிதாக ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளது.
சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில் மதுபான நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறி வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து, சந்திரபாபு நாயுடு மீது தொடரப்பட்ட வழக்கில் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.