நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அத்துடன் ஆந்திரா மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்றது.
இதில் ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் 160 தொகுதிகளை கைப்பற்றி தெலுங்க தேசம் கட்சி அபார வெற்றிபெற்றுள்ளது.
https://www.apcnewstamil.com/news/politics/india-alliance-invites-chandrababu-naidu/89945
தெலுங்கு தேசம் கட்சி – 136 தொகுதிகளிலும், ஓய் எஸ் ஆர் காங்கிரஜ் கட்சி-10 தொகுதிகளிலும், பாஜக – 8 தொகுதிகளிலும், ஜனசேனா -21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதன் மூலம் மீண்டும் முதல்வர் ஆகிறார் சந்திரபாபு நாயுடு. ஜூன் 9-ம் தேதி பதிவியேற்க உள்ளதாக தகவல் வந்த நிலையில். பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அவரது சமூகவலைத்தள பக்கத்தில் ஆந்திரா தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதுபோன்று அரசியல் பிரமுகர்கள் பலரும் ஆந்திர தெலுங்கு தேசம் வெற்றி குறித்து சந்திரபாபு நாயுடுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.