சந்திரபாபுவிற்கு 24-ம் தேதி வரை சிறை காவல் நீட்டிப்பு
சந்திரபாபு கைது செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் சந்திரபாபு தரப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆந்திரவில் சந்திரபாபு ஆட்சியில் இருந்தபோது இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி வழங்கும் திட்டம் ரூ.241 கோடி மோசடி நடந்ததாக சி.ஐ.டி.போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி ராஜமகேந்திரவரம் சிறையில் கடந்த 10-ம் தேதி அடைத்தனர். நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில் சந்திரபாபுவை நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதால் சந்திரபாபுவை வீடியோ கான்பரன்ஸ் மூலம் சிஐடி நீதிபதி முன்பு சிறைத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி முன்பு பேசிய சந்திரபாபு, நான் செய்யாத குற்றத்திற்கு கைது செய்யப்பட்டுள்ளேன். அரசியல் ரீதியாக பழிவாங்க தன்னை கைது செய்துள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு நீதிபதி நீங்கள் நீதிமன்ற காவலில் உள்ளீர்கள், போலீஸ் காவலில் இல்லை. உங்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன, அவை தீரும் வரை நீதிமன்ற காவலில் இருக்க வேண்டும் என்று நீதிபதி கூறி 10 நிமிடம் கழித்து சந்திரபாபுவிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசுவதாக கூறி பின்னர் இரண்டு நாட்கள் சிறை காவலை நீடித்து 24 வரை சிறை காவல் தொடரும் என உத்தரவிட்டார். இந்நிலையில் திறன் மேம்பாட்டு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கக் கோரி ஊண்டவல்லி என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு எண் உயர்நீதிமன்றத்தில் ஆனது. விரைவில் இந்த வழக்கும் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.
சந்திரபாபு மீது தொடரப்பட்ட திறன்மேம்பாட்டு மோசடி வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் சந்திரபாபு தரப்பு தாக்குதல் செய்த வழக்கில் சி.ஐ.டி. போலீசார் 900 பக்கம் வழக்கு தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்துள்ள நிலையில் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சந்திரபாபு தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கு குறித்து உச்சநீதிமனறத்தில் மேல்முறையீடு செய்ய சந்திரபாபு வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் சி.ஐ.டி. போலீசார் சந்திரபாபுவை போலீஸ் விசாரனைக்கு 5 நாட்கள் வழங்கக்கோரி தொடர்ந்த வழக்கில் 2 நாட்கள் அனுமதித்து தீர்ப்பு வழங்கினார்.