சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதையின் உயரம் நான்காவது முறையாகக் குறைக்கப்பட்டது.
நீட் தேர்வுக்கு எதிராக ஆக.20ல் திமுக சார்பில் உண்ணாவிரதம்
நிலவின் தென் பகுதியை ஆய்வுச் செய்வதற்காக, கடந்த ஜூலை மாதம் 14- ஆம் தேதி அன்று சந்திரயான்- 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. புவியின் சுற்றுப்பாதையில் இருந்து விலகி, கடந்த ஆகஸ்ட் 5- ஆம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் சந்திரயான்- 3 விண்கலம் நுழைந்தது.
வெற்றிகரமாக தனது பயணத்தைத் தொடர்ந்து வரும் சந்திரயான்- 3 விண்கலத்துக்கும், நிலவுக்கும் இடையிலான உயரம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 16) காலை 08.30 மணியளவில் நான்காவது முறையாக உயரம் வெற்றிகரமாகக் குறைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
விண்கலத்தின் உந்துவிசை கலன் மற்றும் தரையிறங்கும் கலன் இரண்டும் நாளை (ஆகஸ்ட் 17) தனியாகப் பிரிக்கப்படவுள்ளன. அதனால் சந்திரயான்- 3 விண்கலத்தின் ஒவ்வொரு நகர்வையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். ஆகஸ்ட் 20- ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் இருந்து 30 கிலோ மீட்டர் உயரத்துக்கு தரையிங்கும் கலன் கொண்டு செல்லப்படும்.
பிரசித்தி பெற்ற புனித சகாய அன்னை ஆலயத்தின் 48 ஆம் ஆண்டு தேர் பவனி பெருவிழா
அதன் பின், ஆகஸ்ட் 23- ஆம் தேதி மாலை 05.47 மணிக்கு சந்திரயான்- 3 விண்கலத்தின் தரையிறங்கு கலனை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.