
சந்திராயன்-3 விண்கலம் ஜூலை இரண்டு அல்லது மூன்றாவது வாரத்தில் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள்- தமிழக அரசு சார்பில் மரியாதை!
நிலவு குறித்த ஆராய்ச்சியில், இந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘இஸ்ரோ’, தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. நிலவிற்கு விண்கலத்தை அனுப்பும் இந்தியாவின் கனவுத் திட்டமான சந்திராயன்- 3 திட்டம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், எல்விஎம் எம்கே-3 ராக்கெட்டில் சந்திராயன்- 3 விண்கலம் வெற்றிகரமாகப் பொறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
அடுத்தக்கட்டமாக, ராக்கெட் அடுக்குகளை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், திட்டமிட்டப்படி, ஜூலை இரண்டு அல்லது மூன்றாவது வாரத்தில் விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.
தேவை இல்லாமல் குண்டர் சட்டத்தை பயன்படுத்தக்கூடாது- டிஜிபிக்கு கடிதம்
சந்திராயன்- 3 திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு இன்னும் 30- க்கும் குறைவான தினங்களே இருக்கும் நிலையில், ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 90% பணிகள் நிறைவுப் பெற்றிருப்பதாக இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.