
சந்திராயன்- 3 விண்கலம் வரும் ஜூலை 13- ஆம் தேதி அன்று விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ (ISRO) அறிவித்துள்ளது.
லக்ஷ்மி ராமகிருஷ்ணன், சமுத்திரகனி கூட்டணியில் ‘ஆர் யூ ஓகே பேபி’….. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
நிலவை ஆய்வுச் செய்யும் முயற்சியாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, ஏற்கனவே சந்திராயன்- 1 மற்றும் சந்திராயன்- 2 விண்கலங்களை விண்ணில் ஏவியுள்ளது. அந்த வரிசையில், 615 கோடி ரூபாய் செலவில் சந்திராயன்- 3 திட்டத்தைச் செயல்படுத்த விஞ்ஞானிகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, முக்கிய பகுதிகளான லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஏவுதளத்துக்குக் கொண்டு வரப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன.
அனைத்து சோதனைகளும் வெற்றி பெற்ற நிலையில், சந்திராயன்- 3 விண்கலம், அதனைத் தாங்கிச் செல்லும் எல்விஎம்எம்கே 3 ராக்கெட்டின் முன்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சந்திராயன்- 3 விண்கலம் வரும் ஜூலை மாதம் 13- ஆம் தேதி பிற்பகல் 02.30 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்தியன் 2க்கு பிறகு ரெடியாக இருக்கும் இந்தியன் 3 கதை……. உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பரபரப்பான அப்டேட்!
கடந்த 2019- ஆம் ஆண்டு சந்திராயன்- 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஆனால், அதன் நோக்கத்தை நிறைவுச் செய்யாமல் திட்டம் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.