Homeசெய்திகள்இந்தியாசந்திரயான்- 3 விண்கலத்தின் உந்துவிசைக் கலனில் இருந்து பிரிக்கப்பட்ட லேண்டர்!

சந்திரயான்- 3 விண்கலத்தின் உந்துவிசைக் கலனில் இருந்து பிரிக்கப்பட்ட லேண்டர்!

-

 

சந்திரயான்- 3 விண்கலத்தின் உந்துவிசைக் கலனில் இருந்து பிரிக்கப்பட்ட லேண்டர்!
Photo: ISRO

சந்திரயான்- 3 விண்கலத்தின் உந்து சக்தி கலனில் இருந்து வெற்றிகரமாக தனியாகப் பிரிந்த லேண்டர், நிலவின் மேற்பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. சந்திரயான்- 3 நிலவு சுற்றுப்பாதையில் பயணிப்பதை ஐரோப்பிய விண்வெளி மையம், இஸ்ரோ இணைந்து கண்காணிக்கிறது.

அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை

நிலவின் சுற்றுப்பாதையில் பயணிக்கும் லேண்டர் படிப்படியாக உயரம் குறைக்கப்பட்டு, ஆகஸ்ட் 23- ஆம் தேதி தரையிறங்கும். சந்திரயான்- 3 நாளை (ஆகஸ்ட் 17) மாலை 07.00 மணிக்கு விக்ரம் லேண்டரின் உயரம் குறைக்கப்படும். நிலவை நோக்கிய பயணத்தில் புதிய மைல் கல்லை எட்டியது சந்திரயான்- 3 விண்கலம்.” இதனை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்களுடன் குறிப்பிட்டுள்ளது.

மீனவர் வலையில் சிக்கிய 2,000 கிலோ திமிங்கலம்

சந்திரயான்- 3 விண்கலம் ஜூலை 14- ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட நிலையில், லட்சக்கணக்கான கிலோ மீட்டரைக் கடந்து தற்போது நிலவை நோக்கிப் பயணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ