நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று (ஆகஸ்ட் 23) மாலை 06.04 மணிக்கு தரையிறங்குகிறது. இதற்கான இறுதிப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
நிலவில் சந்திரயான்- 3 விண்கலம் எப்படி தரையிறங்கும்? தரையிறங்கிய பின் எப்படி செயல்படும்? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!
லேண்டர், ரோவர், உந்துக்கலம் ஆகிய மூன்று அமைப்புகளையும் சேர்த்தது தான் சந்திரயான்- 3 விண்கலம். தரையிறங்கி கலத்தின் கீழே பொருத்தப்பட்டுள்ள 4 குட்டி ராக்கெட்டுகள் மூலம் சந்திரயான்- 3 தரையிறக்கப்படும். குட்டி ராக்கெட்டுகளை எரித்து, தரையிறங்கிக் கலத்தை மெல்ல மெல்ல தரையிக்க வேண்டும்.
தரையிறங்கி கலம் இறங்கியதுடன் சாய்வுப் பலகையைப் போல் ஒன்று திறந்து கீழே நோக்கி இறங்கும். தரையிறங்கிக் கலத்தில் உள்ள ஊர்திக்கலத்தை வெளியே எடுத்து நிலவின் தரையில் இயக்க வேண்டும். சாய்வுப்பலகை மூலம் உருண்டு இறங்கி, நிலவின் தரையில் ஊர்திக்கலம் தடம் பதிக்கும். மிகத் துல்லியமாகவும், இலகுவாகவும் தரையிறங்கும் வகையில் இந்த முறை லேண்டரை வடிவமைத்துள்ளது இஸ்ரோ.
காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசரை முற்றுகையிட்ட மக்கள்!
749.86 கிலோ எடைக்கொண்ட லேண்டர் (விக்ரம்) நிலவில் தரையிறங்கிய பின் 14 நாட்கள் செயல்படும். அதாவது பூமியின் நேரப்படி 14 நாட்களும்; நிலவின் நேரப்படி ஒரே ஒரு நாளும் செயல்படும் எனக் கூறப்படுகிறது. 26 கிலோ எடைக்கொண்ட ரோவர் நிலவில் தரையிறங்கிய பின்பு தனது ஆய்வுகளை மேற்கொள்ளும். ஆய்வின் போது, தொலைத்தொடர்புக்கு தேவையான சென்சார் அமைப்பு, ஆண்டனாக்கள் ரோவரில் இணைக்கப்பட்டுள்ளது.