Homeசெய்திகள்இந்தியாசந்திரயான் தரையிறங்கு கலத்துடன், சந்திரயான்-2ன் ஆர்ப்பிட்டர் தொடர்பு!

சந்திரயான் தரையிறங்கு கலத்துடன், சந்திரயான்-2ன் ஆர்ப்பிட்டர் தொடர்பு!

-

 

சந்திரயான்- 3 விண்கலத்தின் இறுதி வேகக்குறைப்பு செயல்பாடு வெற்றி!
Photo: ISRO

சந்திரயான்- 3 தரையிறங்கு கலத்திற்கும், ஏற்கனவே உள்ள சந்திரயான்- 2 ஆர்பிட்டருக்கும் இடையே இருவழி தொலைத்தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் சாதகமான சூழல் இல்லாவிட்டால் நிலவில் லேண்டரைத் தரையிறக்குவது ஆகஸ்ட் 27- ஆம் தேதிக்கு தள்ளிப்போகும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பொதுப் பாடத்திட்டம்- ஆளுநரின் கடிதத்தால் புதிய சர்ச்சை!

சந்திரயான்- 3 விண்கலத்தின் தரையிறங்கு கலம், நிலவின் மேற்பரப்பில் இருந்து 25 கி.மீ. குறைந்தபட்ச சுற்று வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. இந்த தரையிறங்கு கலம், வரும் புதன்கிழமை நிலவின் மேற்பரப்பில் இறங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கலத்தின் ஒவ்வொரு நகர்வையும் இஸ்ரோ கண்காணித்து வருகிறது.

ரஷ்யாவின் லூனா விண்கலம், நிலவின் மேற்பரப்பில் மோதி தோல்வியடைந்திருக்கும் நிலையில், சந்திரயான்- 3ன் தரையிறங்கு கலம் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், சந்திரயான்- 3 விண்கலத்தின் தரையிறங்கு கலன், சந்திரயான்- 2ன் ஆர்ப்பிட்டருடன் இருவழித் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று முடிந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனம்- திருப்பி அனுப்பிய ஆளுநர்!

தரையிறங்கு கலம் தரையிறங்கிய பிறகு பூமியில் இருந்து அறிவியல் ஆய்வுகள் குறித்து தரவுகளையும், கட்டளைகளையும் பிறப்பிக்க சந்திரயான்- 2 ஆர்ப்பிட்டார் இணைப்பு பலமாக செயல்படும். சந்திரயான்- 3 திட்டத்தின் படி, திரையிறங்கும் கலம் மற்றும் ரோவர் அனுப்பப்பட்ட நிலையில், சந்திரயான்- 2 திட்டத்தின் ஆர்ப்பிட்டர் அதில் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தரையிறங்கு கலத்தின் செயல்பாடுகள் குறித்து சோதனை செய்யும் விதமாக, ஆகஸ்ட் 19- ஆம் தேதி அதில் உள்ள விபத்து தவிர்ப்பு கேமரா மூலம் எடுக்கப்பட்ட நிலவின் நான்கு புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. லேண்டரில் உள்ள ஒன்பது சென்சார்கள் மற்றும் கேமராக்களின் செயல்பாடுகள் குறித்து இஸ்ரோ தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது.

MUST READ