நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சென்ற சந்திரயான்- 3 விண்கலம், முதன் முதலாக நிலவின் மேற்பரப்பை படம் பிடித்து அனுப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோவை இஸ்ரோ சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
‘பாரதியார் மண்டபம்’ ஆன தர்பார் ஹால்!
சந்திரயான்- 3 விண்கலம், கடந்த ஜூலை 14- ஆம் தேதி எல்விஎம் ராக்கெட் மூலம் விண்ணிற்கு அனுப்பப்பட்டது. ராக்கெட் புறப்பட்ட 16வது நிமிடத்தில் புவியின் சுற்றுவட்டப்பாதையில் விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து, பூமியைச் சுற்றி நீள்வட்டப்பாதையில் பயணித்த சந்திரயான்- 3 விண்கலம், கடந்த சனிக்கிழமை அன்று நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது.
இந்த தருணத்தில் நிலவின் மேற்பரப்பைப் படம் பிடித்து, சந்திரயான்- 3 விண்கலம், அனுப்பியுள்ளது. உயர் தொழில்நுட்ப கேமரா மூலம் எடுக்கப்பட்ட பிரம்மிப்பூட்டும் காட்சிகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவில் உள்ள பள்ளங்களை சந்திரயான்- 3 விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் துல்லியமாக, படம் பிடித்துள்ளன.
‘காவிரி விவகாரம்’: மத்திய அமைச்சருக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்!
இதற்கிடையே, சந்திரயான்- 3 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையை நிலவை நோக்கிப் படிப்படியாகக் குறைக்கும் பணியும் தொடங்கியுள்ளது. வரும் ஆகஸ்ட் 23- ஆம் தேதி இரவில் சந்திரயான்- 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.