Homeசெய்திகள்இந்தியாசந்திரயான்-3 திட்டத்திற்கு இத்தனை கோடி செலவா?

சந்திரயான்-3 திட்டத்திற்கு இத்தனை கோடி செலவா?

-

சந்திரயான்-3 திட்டத்திற்கு இத்தனை கோடி செலவா?

சந்திரயான்-3 திட்டத்துக்கான ராக்கெட், ரோவர், லேண்டர் உள்ளிட்டவை தயாரிப்பில் பங்கெடுத்த நிறுவனங்களின் பங்குகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image

நிலவில் தண்ணீர் இருப்பதை ஆராய்ந்து முதலில் கண்டறிந்தது சந்திராயன் 1. இதனைதொடர்ந்து 2019 ஆண்டு சந்திராயன் – 2 திட்டத்தில் விக்ரம் லாண்டர் தரை இறக்கும் போது ஏற்பட்ட சிக்னல் பிரச்சனை காரணமாக சாப்ட் லேண்டிங் செய்ய முடியாமல், சந்திராயன் இரண்டு திட்டம் தோல்வியடைந்தது. அந்தத் தோல்வியிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்களை பல்வேறு தொழில்நுட்ப ரீதியிலான மாற்றங்களுடன் ஜூலை 14ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது சந்திரயான் -3 விண்கலம்.

இந்த விண்கலம் திட்டமிட்டப்படி, ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதன்பின் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் இருந்து புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. அதன்பு லேண்டரிலிருந்து பிரிந்து ரோவர் 14 நாட்கள் நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்யும் என இஸ்ரோ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே ஒரு திரைப்படத்தின் பட்ஜெட்டைவிட மிக குறைவான பட்ஜெட்டில் சந்திரயான் 3-ஐ அனுப்பியிருக்கிறோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

"நிலவில் வலம் வரத் தொடங்கியது ரோவர்"- இஸ்ரோ அறிவிப்பு!
Photo: ISRO

இந்நிலையில் சந்திரயான்-3 திட்டத்துக்கான ராக்கெட், ரோவர், லேண்டர் உள்ளிட்டவை தயாரிப்பில் பங்கெடுத்த நிறுவனங்களின் பங்குகள் அதிகரித்துள்ளது. ரூ.615 கோடி செலவில் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

MUST READ