Homeசெய்திகள்இந்தியாசந்திராயன் 3..விண்ணில் பாய கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது…இஸ்ரோ தகவல்...

சந்திராயன் 3..விண்ணில் பாய கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது…இஸ்ரோ தகவல்…

-

இன்று பிற்பகல் 1 மணிக்கு 26 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கவுள்ளதாக இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீஹரிகொட்டாவின் 2வது ஏவுதளத்தில் இருந்து நாளை மதியம் 2 மணி 37 நிமிடம் 17 விநாடிகளில் சந்திராயன் -3 விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட் விண்ணில் பாய்யவுள்ளது.ஆதலால் இன்று பிற்பகல் 1 மணிக்கு 26 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கவுள்ளதாக இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ ,நிலவின் தென்துருவத்தில் ஆய்வு  செய்வதற்காக சந்திராயன் -2 என்ற விண்கலம் 2019ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது.இது 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை சென்றடைந்தது.ஆனால் தொழில்நுட்ப கோளாறுகளால் திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிரங்கவில்லை.நிலவில் மோதி செயலிழந்தது.அதேநேரம் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இஸ்ரோ ரூ.615 கோடியில்சந்திராயன் -3 விண்கலத்தை வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் எல்.வி.எம்-3எம்-4 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2 ஆம் தளத்திலிருந்து ஜீலை 14 ஆம் தேதி மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளனர்.

 

இதற்கான ஒத்திகை நிகழ்வும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து  ராக்கெட்டில் எரிப்பொருள் நிரப்புதல் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று மதியம் 1 மணிக்கு சந்திராயன் -3 26 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்குகிறது. ஸ்ரீஹரிகொட்டாவின் 2வது ஏவுதளத்தில் இருந்து நாளை மதியம் 2 மணி 37 நிமிடம் 17 விநாடிகளில் சந்திராயன் -3 விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட் விண்ணில் பாய்யவுள்ளது.சந்திராயன் -3 விண்கலத்தின் மூலம் நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கும் 4 வது நாடு என்ற பெருமயை இந்தியா பெரும் என மத்திய விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

MUST READ