Homeசெய்திகள்இந்தியாசந்திரயான் 3 லேண்டர் தரையிறக்கம்: யூடியூப் நேரலையை 80 லட்சம் பேர் பார்த்து உலக சாதனை!

சந்திரயான் 3 லேண்டர் தரையிறக்கம்: யூடியூப் நேரலையை 80 லட்சம் பேர் பார்த்து உலக சாதனை!

-

 

நிலவில் கால் பதித்தது இந்தியா!
Video Crop Image

நிலவில் தென் துருவப் பகுதியில் சந்திரயான்- 3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கிய நிகழ்வை 80 லட்சத்திற்குக்கும் அதிகமானோர் யூடியூப் பக்கத்தில் நேரலையாகப் பார்த்து உலக சாதனை படைத்துள்ளனர்.

டி20 தொடரை வென்று இந்திய அணி அசத்தல்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அனுப்பிய லேண்டர் பகுதி நேற்று (ஆகஸ்ட் 23) மாலை 06.04 மணியளவில் நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இந்த நிகழ்வை ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் இஸ்ரோ நிறுவனம் நேரலையில் ஒளிபரப்புச் செய்தது.

வெற்றியைத் தீர்மானிக்க நாளை டை பிரேக்கர்!

லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்கிய நிகழ்வை மட்டும், யூடியூப் பக்கத்தின் நேரலையை 80 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுக்களித்தனர். இதற்கு முன் உலகக்கோப்பை கால்பந்துத் தொடரின் பிரேசில், குரேசியா போட்டியை 60 லட்சம் பேர் பார்த்ததே சாதனையாக இருந்தது.அந்த சாதனையை இஸ்ரோ யூடியூப் நேரலை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ