Homeசெய்திகள்இந்தியாஹைதராபாத்தில் சென்னை ரயில் தடம் புரண்டது!

ஹைதராபாத்தில் சென்னை ரயில் தடம் புரண்டது!

-

- Advertisement -

 

ஹைதராபாத்தில் சென்னை ரயில் தடம் புரண்டது!

சென்னையில் இருந்து சென்ற விரைவு ரயில் ஹைதராபாத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் 2ஆவது நாளாக வேலை நிறுத்தம்!

சென்னையில் இருந்து சார்மினார் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த விரைவு ரயில், ஹைதராபாத்தில் உள்ள நாம்பள்ளி ரயில் நிலையத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் சாதாரண வகுப்பு படுக்கை வசதியுடைய S2, S3, S6 உட்பட ஐந்து பெட்டிகள் விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் தடம்புரண்ட பெட்டிகளில் பயணித்த பயணிகளில் 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் லால்குடா ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

“ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கைத் தேவை”- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

விபத்து குறித்து தகவலறிந்து வந்த ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரயில்வேத்துறை அதிகாரிகள் தடம் புரண்ட பெட்டிகளை அகற்றி, தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இதில் 50- க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ரயில்வேத்துறையின் உயரதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ