Homeசெய்திகள்இந்தியாமுதலமைச்சர் தேர்வு- மேலிட பார்வையாளர்களை நியமித்தது காங்கிரஸ்!

முதலமைச்சர் தேர்வு- மேலிட பார்வையாளர்களை நியமித்தது காங்கிரஸ்!

-

 

Photo: ANI

மொத்தம் 224 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு மே 10- ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 13- ஆம் தேதி அன்று நடைபெற்ற நிலையில், 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது.

சி.பி.ஐ. இயக்குநராக பிரவீன் சூட் நியமனம்!

மேலும், தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கவுள்ளது. இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (மே 14) மாலை 05.30 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில், காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதலமைச்சரைத் தேர்வு செய்து, தங்களது ஆதரவு கடிதத்தையும் வழங்கவுள்ளனர். இந்த நிலையில், சுஷில்குமார் ஷிண்டே, தீபக் பவாரியா, பன்வார் ஜித்தேந்திரா ஆகியோர் கட்சியின் மேலிடப் பார்வையாளர்களாக நியமித்து உத்தரவிட்டுள்ளது அகில இந்திய காங்கிரஸ் தலைமை.

மேலிட பார்வையாளர்கள் மூன்று பேரும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அறிக்கை அளிப்பர் என்று காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.

ஆற்றில் குளிக்கச் சென்று மூழ்கிய வேத பாடச்சாலை மாணவர்கள்!

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், “முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. கட்சிக்காக பலமுறை தியாகம் செய்து சித்தராமையாவுடன் நின்றுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ