ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றனர்.
“தமிழகத்தில் வெப்ப அலை வீசும்”- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
மத்திய பிரதேசம் மாநிலம், செஹோர் மாவட்டத்தின் மூங்வாலி கிராமத்தில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஷிருஷ்டி என்ற இரண்டு வயது பெண் குழந்தை நேற்று (ஜூன் 06) ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளது. இது குறித்து மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு தொலைபேசி மூலம் பொதுமக்கள் மற்றும் குழந்தையின் பெற்றோர் தகவல் கொடுத்துள்ளனர்.
அதிமுகவை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் பழனிவேல் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
இதையடுத்து, காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது, குழந்தை எத்தனை அடி ஆழத்தில் சிக்கியிருக்கிறார் என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, குழந்தை 30 அடி ஆழத்தில் சிக்கியிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, பொக்லைன் இயந்திரத்தின் உதவியோடு, ஆழ்துளை கிணற்றில் இருந்து ஐந்து மீட்டர் உயரத்தில் மற்றொரு குழியைத் தோண்டி, குழந்தையை மீட்கும் முயற்சியில் மீட்புப் படையினர் இறங்கியுள்ளனர்.