Homeசெய்திகள்இந்தியாகாணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு!

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு!

-

- Advertisement -

 

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு!

காணாமல் போன 9 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் வருவதால் மதுரை எய்ம்ஸ் பணி தொடக்கம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்!

புதுச்சேரி மாநிலம், சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஆர்த்தி. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5- ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் சனிக்கிழமை அன்று அதாவது கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போனார்.

இது குறித்து காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், சோலை நகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வுச் செய்தனர். அதில் சிறுமி நடந்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, சிறுமி நடந்து சென்ற பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த நிலையில், சிறுமியைக் கண்டுபிடித்துத் தரக்கோரி சிறுமியின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், சிறுமியின் உடல் அதே பகுதியில் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கணவரிடம் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை!

சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், கொலை வழக்காகப் பதிவுச் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ