சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி போலீசார் விசாரணை
ராஜமகேந்திரவரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபுவிடம் நீதிமன்ற உத்தரவுப்படி சி.ஐ.டி. விசாரணை நடத்திவருகின்றனர்.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு ஆட்சியின்போதுப்திறன்மேம்பாட்டு நிதி மோசடியில் ஈடுப்பட்டு வழக்கில் சி.ஐ.டி. போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி ராஜமகேந்திரவரம் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் சி.ஐ.டி. போலீசார் ஐந்து நாட்கள் விசாரனைக்கு நீதிமன்றத்தில் அனுமதி கேட்ட நிலையில் 2 நாட்கள் அனுமதி அளித்தனர். இன்று காலை சிறையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
பின்னர் சிஐடி டிஎஸ்பி தனுஞ்சயுடு தலைமையில் 9 அதிகாரிகள் சிறைக்கு சென்று விசாரணையை தொடங்கினார். சந்திரபாபு சார்பில் இரண்டு தம்மலபதி ஸ்ரீனிவாஸ் மற்றும் கிஞ்சுபள்ளி சுப்பாராவ் ஆகிய இரு வழக்கறிஞர்கள் முன்னிலையில் சந்திரபாபு விசாரணை குழுவில் உள்ள வி.விஜய் பாஸ்கர், ஏ.லட்சுமிநாராயணா, எம்.சத்தியநாராயணா, மோகன், ரவிக்குமார், ஸ்ரீனிவாஸ், சாம்பசிவராவ், ரங்கநாயகுலு ஆகியோருடன் மேலும் இரண்டு நிலையாளர்கள் மற்றும் ஒரு வீடியோகிராபர் இருக்க விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மாலை 5.30 மணி வரை விசாரனை மேற்கொள்ள உள்ள நிலையில் நாளையும் விசாரணை தொடர உள்ளது.
இதில் சந்திரபாபுவிடம் இருந்து திறன்மேம்பாட்டுப்நிதி மோசடியில் கிடைத்த பணத்தை எந்தெந்த நிறுவனத்தில் யார் மூலமாக முதலீடு செய்யப்பட்டது. மீண்டும் எவ்வாறு பணம் கைமாறியது என விசாரணை செய்ய உள்ளனர்.