புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு நவ.6- ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக, நவம்பர் 2- ஆம் தேதி விசாரணைக்கு வர வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் நடைபெறும் விசாரணையில், இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக, கடந்த ஏப்ரல் மாதம் சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த புதிய மதுபான கொள்கையின் அடிப்படையில், மதுபான விற்பனை உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்தது. இது தொடர்பாக, வழக்குப்பதிவுச் செய்த சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது.
யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
இந்த முறைகேட்டில் பல கோடி ரூபாய் சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக, வழக்குப்பதிவுச் செய்த அமலாக்கத்துறையினர், டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா வீட்டில் சோதனை நடத்திய பின், கடந்த பிப்ரவரி மாதம் அவரை கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, அந்த கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் கைது செய்யப்பட்டார்.
மணீஷ் சிசோடியா பிணைக்கோரி தாக்கல் செய்த மனுவை திங்கள்கிழமை அன்று உச்சநீதிமன்றம் நிராகரித்த நிலையில், டெல்லி முதலமைச்சருக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.