டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு காவல்துறைப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நான் தாயாக போகிறேன்…. ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமலா பால்!
டெல்லி அரசுக் கொண்டு வந்த புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. முறைகேடுகளால் அரசுக்கு ரூபாய் 2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன், இது தொடர்பாக, அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகிறது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி துணை முதலமைச்சருமான மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அதேபோல், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கும் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த சூழலில், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நேரில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை மூன்றாவது சம்மனை அரவிந்த் கெஜ்ரிவால் அனுப்பியிருந்த நிலையில், அதனை வாங்க அவர் மறுத்துவிட்டார். முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என டெல்லி அமைச்சர் அதிஷி நேற்று (ஜன.03) கூறிய நிலையில், முதலமைச்சரின் வீட்டின் முன்பு அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கான்ஜுரிங் கண்ணப்பனை தொடர்ந்து ‘வித்தைக்காரன்’ படத்தை களமிறக்கும் சதீஷ்…. ரிலீஸ் எப்போது?
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், ஆத் ஆத்மி கட்சிக்கு நெருக்கடிகொடுக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.