சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்குகள் கிடைக்காது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி!
மேற்கு வங்கம் மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் கடல் அரிப்பால் நிலங்களை இழந்தவர்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்வில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பா.ஜ.க.வை எதிர்த்து போராட வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக பா.ஜ.க. அரசு விசாரணை அமைப்புகளை ஏவி வருகிறது. இந்த விசாரணை அமைப்புகளால் பா.ஜ.க.வுக்கு வாக்குகளைப் பெற்று தர முடியாது.
“அறிவார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு திராவிட மாடல் புரியும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
மத்திய அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், முர்ஷிதாபாத் மற்றும் மால்டா மாவட்டங்களில் பெரும் பிரச்சனையாக உள்ள மணல் அரிப்பைத் தடுப்பதற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை. பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு, மக்களுக்காக பணியாற்றுவதை விடுத்து, வெறுப்புணர்வைப் பரப்புவதிலும், அட்டூழியம் செய்வதிலும் கவனம் செலுத்துகிறது” என்று குற்றம்சாட்டினார்.