Homeசெய்திகள்இந்தியாமுதலமைச்சர் சித்தராமையா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு....கர்நாடக மக்கள் மகிழ்ச்சி!

முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….கர்நாடக மக்கள் மகிழ்ச்சி!

-

 

முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு....கர்நாடக மக்கள் மகிழ்ச்சி!
Photo: ANI

பெங்களூருவில் உள்ள சட்டப்பேரவையில் இன்று (ஜூன் 02) மாலை 04.00 மணியளவில் கர்நாடகா மாநில முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சர் சிவக்குமார் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

கன்னியாஸ்திரி பலாத்காரம்! போப் அதிரடி! பதவி விலகினார் பிஷப் பிரான்கோ மூலக்கல்

அமைச்சரவைக் கூட்டத்தில், தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை செயல்படுத்துவது, நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பது, மாநில அரசின் வருவாய், மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் கூறுகின்றனர். அத்துடன், சில திட்டங்களுக்கும் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் சித்தராமையா, “இன்று அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினோம். இதில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்ட ஐந்து வாக்குறுதிகளை செயல்படுவது குறித்து விரிவாக விவாதித்தோம். அத்துடன், அந்த வாக்குறுதிகளை நடப்பு நிதியாண்டில் அமல்படுத்த முடிவு செய்துள்ளோம்.

வரும் ஜூன் 11- ஆம் தேதி முதல் கர்நாடகாவில் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம். எனினும், குளிர்சாதனப் பேருந்துகள் மற்றும் ஸ்லீப்பர் பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்ள முடியாது. ஜூலை 1- ஆம் தேதி அன்று ‘அன்ன பாக்யா’ (Anna Bhagya) திட்டத்தின் கீழ் அந்தியோதயா குடும்ப அட்டைத்தாரர்களுக்கு மாதந்தோறும் 10 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டம் தொடங்கப்படும். குருஹா ஜோதி (Gruha Jyoti) திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம், ஜூலை 1- ஆம் தேதி நடைமுறைக்கு வரும்.

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்து வந்த பாதைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

199 யூனிட் வரையிலான மின்சாரத்தை உபயோகிப்பவர்கள், கட்டணத்தைச் செலுத்த தேவையில்லை; அந்த கட்டணத்தை அரசே செலுத்தும். ‘குருகா லக்ஷ்மி’ (Gruha Lakshmi) திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 2,000 வழங்கும் திட்டம் வரும் ஆகஸ்ட் 15- ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

கர்நாடகா அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான பேருந்துகளில் தொலைத்தூரப் பயணம் செய்யும் பயணிகள் பேருந்துகளில் 50% ஆண்களும், 50% பெண்களுக்கு பயண டிக்கெட் முன்பதிவு செய்யும் புதிய நடைமுறை ஜூன் 11- ஆம் தேதி அமலுக்கு வரும்” எனத் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில முதலமைச்சரின் அறிவிப்பால், அந்த மாநில மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ