வணிக கேஸ் சிலிண்டரின் விலை உயர்வால் உணவகங்கள் மற்றும் கேட்டரிங் உரிமையாளர்கள், டீ கடை உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மோகன்லால் – பிருத்விராஜ் கூட்டணியில் எம்புரான்… படப்பிடிப்பில் பங்கேற்றார் டொவினோ…
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் விலை மாற்றங்கள் தொடர்பான அறிவிப்புகளை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில், மார்ச் 01- ஆம் தேதியான இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையை ரூபாய் 23.50 உயர்த்தியுள்ளனர். அதன்படி, சென்னையில் 19 கிலோ வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 23.50 உயர்ந்து, ரூபாய் 1,960.50- க்கு விற்பனையாகிறது. எனினும், சென்னையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை எந்த மாற்றமுமின்றி ரூபாய் 918.50-க்கு விற்பனையாகிறது.
புஷ்பா 2 பட உரிமையை கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனம்
வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் வர்த்தகர்கள், வர்த்தக நிறுவனங்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.