Homeசெய்திகள்இந்தியாவணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு!

வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு!

-

 

வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்கள் விலை அதிரடியாக குறைப்பு!
File Photo

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

தாம்பூல பையில் மதுபாட்டிலையும் சேர்த்து வழங்கிய மணமகள் வீட்டார்!

இதன் அடிப்படையில், வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள், கடந்த சில மாதங்களாகக் குறைத்து வருகின்றனர். அந்த வகையில், மாதத்தின் முதல் நாளான இன்று (ஜூன் 1) 19 கிலோ எடைக் கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 84.50 குறைக்கப்பட்டு, சென்னையில் ரூபாய் 1,937- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

டெல்லியில் 1,773 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 1,875.50 ரூபாய்க்கும், மும்பையில் 1,725 ரூபாய்க்கும் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 14.2 கிலோ எடைக் கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் சென்னையில் ரூபாய் 1,018.5 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

என்.சி.சி. ஆய்வுக் குழுவில் தோனியுடன் தான் பணியாற்றியதாக தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா நெகிழ்ச்சி!

எனினும், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. அதேபோல், பெட்ரோல், டீசல் விலையிலும் எவ்வித மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ