“மார்பு, தொப்புள்களில் கைவைத்தார்” பாஜக எம்பி பிரஜ் பூஷண் மீது புகார்
மல்யுத்த வீராங்கனைகளை 15 முறை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக மல்யுத்த வீராங்கனை கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் மீது குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த நட்சத்திரங்களான சாக்ஷி மாலிக், தினேஷ் போகத், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் கடந்த ஏப்ரல் மாதம் 23- ஆம் தேதி அன்று டெல்லியில் போராட்டத்தில் குதித்தனர். அவர்களுக்கு ஆதரவாக முன்னணி மல்யுத்த வீரர்களும், விவசாயிகளும் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனிடையே கடந்த 8 ஆம் தேதி, போராட்டத்தை ஜூன் 15 ஆம் தேதி வரை தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர்.
இந்நிலையில் மல்யுத்த வீராங்கனைகளை மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் அநாகரிகமாக தொட்டதாக பாதிக்கப்பட்ட வீராங்கனைகள் குற்றஞ்சாட்டுகின்றன. மல்யுத்த வீராங்கனைகளின் மார்பு, பின்புறம், தொப்புள்களில் பிரஜ் பூஷண் கை வைத்ததாகவும் வழக்கு பதியப்பட்டுள்ளது. வீராங்கனைகள் விளையாட்டில் முன்னேற உதவ வேண்டுமானால் தன் விருப்பத்துக்கு வளைந்து கொடுக்க வற்புறுத்தியதாகவும், தன் பாலியல் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என இருமுறை பிரஜ் பூஷண் கட்டாயப்படுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது. வீராங்கனைகள் 7 பேர் கொடுத்துள்ள புகார்களின் பேரில் பிரஜ் பூஷண் சரண் சிங் மீது இரு வழக்குகளை போலீஸ் பதிந்துள்ளது.