Homeசெய்திகள்இந்தியாடெல்லியில் தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு நேரம் – துணைநிலை ஆளுநர் உத்தரவு

டெல்லியில் தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு நேரம் – துணைநிலை ஆளுநர் உத்தரவு

-

தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத வகையில் 50 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில், உடலை உருக்கும் வெயிலில் தொழிலாளர்கள் வேலை பார்ப்பதை தவிற்க  3 மணி நேரம் கட்டாயம் ஓய்வு வழங்க துணைநிலை ஆளுநர்  உத்தரவிட்டுள்ளார்.

தலைநகர் டெல்லியில் பெரும்பாலான பகுதிகளில் 49.9 டிகிரி செல்சியஸ் (122 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகியுள்ளது. வெயிலின் உச்சத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அவதி அடைந்து வரும் நிலையில் வெயிலை பொருட்படுத்தாமல் தொழிலாளர்கள் பலரும் டெல்லியில் வேலை செய்து வருகிறார்கள்.

https://www.apcnewstamil.com/news/crime-news/cctv-footage-of-milk-theft-in-pattabiram-has-been-released-and-causes-anxiety/88124

இதனையடுத்து வெயிலில் வேலை செய்பவர்கள் குறிப்பாக கட்டுமான தொழிலாளர்கள், மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு தினசரி 12 முதல் 3 மணி வரை கட்டாயம் ஓய்வு வழங்க வேண்டும் என டெல்லி துணை ஆளுநர் டெல்லி அரசின் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

டெல்லி அரசின் தலைமைச் செயலாளர் அனைத்து துறை செயலாளர்களை ஆலோசனைக்கு அழைத்து வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள உடனடியாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் எனவும் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் மண் பாண்டங்களில் குடிநீர் வைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

 

பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்துக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள போதிய குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், சுத்திகரிக்கப்பட்ட நீரை டேங்கர் லாரிகள் மூலம் சாலைகளில் தெளிப்பதன் மூலம் ஓரளவுக்கு வெப்பத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும் எனவும் டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே சக்சேனா தெரிவித்துள்ளார்.

 

டெல்லியில் தற்போது 50 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை குறையும் வரை குறிப்பிட்ட உத்தரவுகள் அமல்படுத்த வேண்டும் என தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

MUST READ