அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கற்கள் வீசி தாக்கிய உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினர் 6 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் வசிக்கும் நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் நேற்று மாலை சந்தியா தியேட்டர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த ரேவதி குடும்பத்தினருக்கு ₹ 1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது சில மாணவர்கள் அல்லு அர்ஜுன் வீட்டில் மீது கற்கள் மற்றும் தக்காளி வீசி அங்கிருந்து பூத்தொட்டிகளை வீசி உடைத்தனர். இந்த சம்பவம் குறித்து நடிகர் அல்லு அர்ஜுனிடம் புகார் பெற்ற ஜூப்லி ஹில்ஸ் போலீசார் 6 மாணவர் சங்கத்தினரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களை நீதிபதி முன்னிலையில் போலீசெ இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து நீதிபதி மூன்று நாட்களுக்குள் ஒவ்வொரு நபரும் தலா ₹ 10,000 பிராமண பத்திரத்துடன் இரண்டு ஜாமீன் பத்திரத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் நீதிபதி ஜாமீன்.
மரக்காணத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 சகோதர்களில் ஒருவர் மீட்பு!