நாட்டை வளமாக்கும் விவசாயிகளுக்கு தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துக்கள் விவசாயிகளின் உரிமை மற்றும் கண்ணியத்தை பாதுகாக்க எப்போதும் தயாராக இருக்கிறோம் என தலைவர் ராகுல் காந்தி தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.1979ல் இந்திய பிரதமராக இருந்த சவுத்ரி சரண் சிங் விவசாய மற்றும் கிராமப்புற சமூகங்களுக்கு ஆதரவாக பல கொள்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்தினார். விவசாயிகள் ஆற்றிய மகத்தான பங்களிப்பை கௌரவிப்பதற்கும், விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டின் நலனுக்காக பணியாற்றிய முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங் பிறந்த நாளை போற்றக்கூடிய வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23ம் தேதி தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் இன்று தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கடின உழைப்பால் நாட்டை வளமாக மாற்றிய விவசாயிகளுக்கு தனது வாழ்த்துக்கள் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தை பாதுகாக்க எப்போதும் தயாராக இருப்பதாகவும் ராகுல்காந்தி சமூக வலைதள பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.
நெருங்கும் 2025 ஜல்லிக்கட்டு – வீரத்தை பறைசாற்ற காத்திருக்கும் காளையர்கள்