Homeசெய்திகள்இந்தியாகாங்கிரஸ்- ஆம் ஆத்மி கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு!

காங்கிரஸ்- ஆம் ஆத்மி கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு!

-

 

காங்கிரஸ்- ஆம் ஆத்மி கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்- ஆம் ஆத்மி கட்சிகள் இடையே டெல்லி, ஹரியானா, கோவா, குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக தொகுதி உடன்பாடு குறித்து இரண்டு கட்சிகளும் அறிவித்துள்ளன.

அம்மாவின் உண்மையான ஆட்சியை அமைத்தே தீருவோம் – டிடிவி தினகரன்

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதிகளும், ஆம் ஆத்மிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவாவில் உள்ள இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மொத்தம் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி ஒரு தொகுதியிலும் போட்டியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சண்டிகரில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, மேற்கு டெல்லி, கிழக்கு டெல்லி, தெற்கு டெல்லி ஆகிய தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியும், வடமேற்கு டெல்லி, வடகிழக்கு டெல்லி, சாந்தினி சவுக்கில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகிறது.

“அதிகமாக நகர மயமாக்கல் கொண்ட மாநிலம் தமிழகம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தொகுதி பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் எம்.பி. அறிவித்துள்ளார்.

MUST READ