மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி இன்று (ஏப்ரல் 12) தமிழகம் வருகிறார்.
ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் – ரசிகர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரைச் செய்து வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவுத் திரட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல்காந்தி இன்று (ஏப்ரல் 12) தமிழகம் வரவுள்ளார்.
ஒரே நாளில் இரு இடங்களில் பரப்புரை மேற்கொள்ளும் வகையில் அவரது பயணத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நெல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் ராகுல்காந்தி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய 8 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார்.
மேலும், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்தும் ராகுல்காந்தி பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். அதைத் தொடர்ந்து, கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ராகுல்காந்தி பரப்புரை செய்கிறார்.
மும்பை அணிக்கு 197 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு அணி!
இதனிடையே, நெல்லையில் பொதுக்கூட்டத்திற்கான மேடை அமைக்கும் பணி உள்ளிட்ட முன்னேற்பாடுகளை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆய்வு செய்தார்.