Homeசெய்திகள்இந்தியாகாங்கிரஸின் நாயகன் இராகுல் காந்தி;

காங்கிரஸின் நாயகன் இராகுல் காந்தி;

-

இராஜீவ் காந்தியின் மறைவிற்கு பிறகு காங்கிரஸின் வெற்றிடத்தை நிரப்பியவர் இராகுல் காந்தி;

காங்கிரஸ் கட்சியின் எதிர் காலமாகவும்,நம்பிக்கை நாயகனாகவும் பார்க்கப்படும்  இராகுல் காந்தி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி  தெரிந்துக்கொள்வோம்.

நானும் தமிழன் தான் என நாடறிய  முழங்கியவர் ,நல்லதொரு தலைவர்,நாட்டிற்காக தங்களையே அற்பணித்த குடும்பத்தின்  வழிதோன்றல்,இந்திய மக்களின் குரலை எதிரொலிக்கும் தலைவர் இராகுல் காந்தி அவர்களின் வாழிக்கை வரலாற்றைப் பார்ப்போம்.

இராகுல் அவர்களின் தொடக்க கல்வி ;

இராகுல் காந்தி 1970 ஆம் ஆண்டு ஜுன் 19 ஆம் நாள் இந்தியாவின் தலைநகரமான நியூடெல்லியில் இந்தியாவின் முன்னாள் பிரதமரான இராஜீவ் காந்திக்கும், காங்கிரஸின் இடைக்கால தலைவரான சோனியா காந்திக்கும் மகனாக பிறந்தார்.இவர் சுதந்திரப் இந்தியாவின் முதல் பிரதமருமான ,இந்திய சுதந்திர போராட்ட வீரருமான ஜவஹர்லால் நேருவின் கொல்லுப் பேரனும் ,இந்திரா காந்தியின் பேரனும் ஆவார்.இவரின் படிப்பானது டெல்லியில் உள்ள மாடல் பள்ளியில் தொடங்கியது.இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பின்னர் இவரின் படிப்பானது பாதுகாப்புக் கருதி வீட்டிலேயே தொடரும் நிற்பந்தம் உருவானது.1989 ஆம் அண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியுற்ற போது இராகுல் காந்தி அமெரிக்காவிற்கு அனுப்பட்டார்.

பட்டபடிப்பு;

1989 ஆம் ஆண்டு அமெரிகாவில் ரோலிங்ஸ் கல்லூரியில் சேர்க்கப்பட்டு பி.ஏ.இளங்கலை படிப்பில் பட்டம் பெற்றார்.பிறகு கேம்பிரிஜ் பல்கலைகழகத்தில் இணைந்த அவர் டிரினிடிக் கல்லூரியில் சேர்ந்து எம்.பில் பட்டம் பெற்றார்.வெற்றிகரமாக தனது பட்டபடிப்பை முடித்தார்.ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு 2002ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். மும்பையில் பொறியியல் மற்றும்  தொழில்நுட்பதுறை நிறுவனத்தை நடத்தி வந்தார்.2023 ஆம் ஆண்டு பிறகு அவ்வபோது தனது தாயாருடன் பொது கூட்டத்திற்கு சென்று வந்தார்.

அரசியல் பயணத்தின் தொடக்கம்;

இராகுல் காந்தி அவர்கள் தனது அரசியல் பயணத்தை மார்ச் 2004 ஆம் ஆண்டு  முதல் தொடங்கினார்.2004 ஆம் ஆண்டில் மே மாதம் நடைப்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் தனது தந்தையின் தொகுதியான அமேதியில் போட்டியிடுவதாக அறிவித்தார்.இத்தொகுதியில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்  வெற்றிப்பெற்று  பாராளுமன்ற உறுப்பினரானார்.2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயளாலராகப் பொறுப்பேற்றார்.இளைஞர் காங்கிரஸ் அமைப்பிற்கும்,இந்திய தேசிய காங்கிரஸ் அமைச்சகத்துக்கும் செயளாலராகவும் பொறுப்பேற்றார். இளைஞர் காங்கிரஸை பலப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார்.2008 ஆம் ஆண்டு ஒரு நேர்கணலை நடத்தி இந்திய இளைஞர்  காங்கிரஸை வழிநடத்தும் ஆலோசகரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டார்.

அரசியலில் அவரின் சாதனைகள்;

இந்திய தேசிய காங்கிரஸில் தீவிரமக செயல்பட்டு2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரளுமன்ற தேர்ததில் தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை விட சுமார் 3 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளின் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மீண்டும் பாராளமன்ற உறுப்பினரானார்.ஏழை, எளிய பழங்குடி மக்களுடைய குறைகளை கேட்டறிந்து அவற்றை மத்திய அரசிடம் பேசி அவர்களின் குறைகளை தீர்க்கவும் பாடுபட்டுள்ளார்.இராஜீவ் காந்தியின் இறப்பிற்கு பிறகு அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் விதமாக இவரின் செயலானது இருந்தது.மத்திய அரசுக்கு எதிராக இவர் வைக்கும் குற்றச்சாட்டிற்கு பாஜாகாவினர் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை.தேர்தல் தோல்வியும் காலம் கற்றுத்தந்த பாடமும் அவரை தீவிர அரசியலை நோக்கி நகர்த்தியது.

2017 ல் டிசம்பர் மாதம் சோனியா வகித்து வந்த காங்கிரஸ் தலைவர் பதவி இராகுல் காந்திக்கு வழங்கப்பட்டது.சுமார் ஒன்றறை ஆண்டுகள், மட்டும் அப்பதவியில் இருந்த அவர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற  நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியதால் தோல்விக்கு முழு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது மீதான பல கேலிகிண்டலுக்கும் தனது அரசியல் பக்குவத்தையும்,முதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இவரின் போர்குரல்;

இப்போதெல்லாம் இவர் வைக்கும் வாதங்கள் மக்களை ஈர்க்கத்தொடங்கியுள்ளனர்.பண மதிப்பு இழப்பீடு கொண்டுவரப்பட்ட போது அதை எதிர்த்து போர்குரல் எழுப்பியவர் இவரே.

ரஃபேல் விவகாரத்தில் தனி ஒரு நபராக மத்திய அரசுக்கு எதிராக போராடினார்.பின்னர் நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்மிக்கையில்லா தீர்மானத்தில் இராகுல் அவர்களின் பேச்சு தீப்பொறியாக அமைந்திருந்தது.இராகுல் அவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் காங்கிரஸ் கட்டியினை முன்னிலைக்கு கொண்டு வருவதுதான்.சோனியா காந்தி அவர்கள் தற்போது இடைக்காலத் தலைவராக இருந்தாலும் அவரின் உடல் நிலைகருதி, இராகுல் அவர்களே மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்கவேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான தொண்டர்களின் எதிர்ப்பார்ப்பாகவுள்ளது.இவரின் சேவைகள் தொடரட்டும் வளமான இந்தியாவை உருவாக்குவோம்.

 

MUST READ