ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கைத் தாக்கல் செய்வதற்கான குழுவில் என்பது பெயர் இருந்தாலும், அதனுடன் இணைந்து செயல்பட மறுத்துள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி.
14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த இந்தியா கூட்டணி!
இது தொடர்பாக, அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை குழுவில் சேர்க்காமல் புறக்கணித்துள்ளதாகவும், இது நாடாளுமன்ற ஜனநாயக முறையை வேண்டுமென்றே இழிவுப்படுத்தும் செயல் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரத்தில் அரசின் மறைமுக நோக்கங்களைக் கவலையை எழுப்புவதாகவும், எனவே, இந்த ஆய்வுக் குழு கண்துடைப்பு என்று அஞ்சுவதாகவும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். எனவே அழைப்பை நிராகரிப்பதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் குழுவில் யார் யார்?- விரிவான தகவல்!
ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆராய குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் அமித்ஷா, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட ஏழு பேர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.