மணப்பெண் தேடித் தராத Matrimony நிறுவனத்திற்கு ரூ.60,000 அபராதம் விதித்தது நுகர்வோர் நீதிமன்றம்!
பெங்களூருவை சேர்ந்த பாலாஜி என்பவருக்கு மணப்பெண் தேடி தராத DILMIL Matrimony க்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது நுகர்வோர் நீதிமன்றம். விஜயகுமார் என்பவர் கடந்த மார்ச்சில் தனது மகனுக்காக மேட்ரிமோனியல் 30000 ரூபாய் பணம் கொடுத்து பதிவு செய்துள்ளார்.
45 நாட்களில் தனது மகனுக்கு எந்த வரனும் பார்த்துக்கொடுக்காததால், கல்யாண் நகரில் உள்ள மேட்ரிமோனி அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரித்துள்ளார். அப்போது அங்கு பணிபுரிபவர்கள் அவரை அவதூறாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர்.
அதனால் வேதனையடைந்த தந்தை விஜயகுமார், அந்த மேட்ரிமோனி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதற்கும் பதிலளிக்காததால் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர் செலுத்திய ₹30,000, சேவை குறைபாட்டிற்காக ₹20,000, மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ₹5,000, வழக்கு செலவு₹5000 என மொத்தம் ₹60,000-ஐ விஜயகுமாருக்கு செலுத்த நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்கள் கடந்தும் எந்த பதிலும் அளிக்காததாலும் மன உளைச்சல் ஏற்படுத்தியதின் காரணமாக நீதிமன்றத்தில் முறையிட்டு நீதி பெற்று உள்ளார் விஜயகுமார்.