நடு ரோட்டில் நின்று முத்தமிட்டு கொண்ட இளம் காதல் ஜோடிகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த நடு ரோடு சம்பவத்தால் அதிர்சிக்குள்ளாகி செய்வதறியாமல் திகைத்துப் போன போக்குவரத்து போலீசார் மற்றும் பொதுமக்கள்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில், முக்கியமான சாலையில் இளம் ஜோடி ஒன்று கட்டிப்பிடித்து முத்தமிட்டு கொண்டு இருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
புனே நகரின் பிரதான சாலை ஒன்றில், இளம் ஜோடிகள் சாலையின் நடுவே நின்று ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தமிட்டு கொண்டனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் ஜோடிகளை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்.
ஆனால் தொடர்ந்து ஜோடிகள் முத்தமிட்டு கொண்டே இருந்தால் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள் கீழிறங்கி இளம் ஜோடிகளை கண்டிக்க தொடங்கினார்.
இதனால் ஜோடிகள் அங்கிருந்து கலைந்து சென்ற காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது. இணையத்தில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், புனே காவல்துறை வீடியோ குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.