Homeசெய்திகள்இந்தியாதமிழில் சிஆர்பிஎஃப் தேர்வு - உள்துறை அமைச்சர் அமித் ஷா

தமிழில் சிஆர்பிஎஃப் தேர்வு – உள்துறை அமைச்சர் அமித் ஷா

-

தமிழில் சிஆர்பிஎஃப் தேர்வு – உள்துறை அமைச்சர் அமித் ஷா

தமிழ் உட்பட 13 மாநில மொழிகளிலும் தேர்வு நடத்தப்படும் என்று தற்போது அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. தமிழ்நாட்டில் மட்டும் 579 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின்-ன் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசு சிஆர்பிஎஃப் தேர்வை தமிழில் எழுதுவதற்கு தற்போது அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. தமிழில் சிஆர்பிஎஃப் தேர்வு என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தமிழில் சிஆர்பிஎஃப் தேர்வு - உள்துறை அமைச்சர் அமித் ஷா

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் நடைபெற கூடிய சிஆர்டிஎஃப் தேர்வு என்பது தமிழ் மாநில இளைஞர்கள் பங்கேற்க கூடிய வகையிலும், அவர்களுக்கு எளிதாக இருக்கக்கூடிய வகையிலும் தமிழில் இந்த தேர்வுகளை நடத்த வேண்டும் என்று கடிதம் மூலமாக ஒரு கோரிக்கையை வைத்தார்.

தமிழில் முதல் முறையாக சிஆர்பிஎஃப் தேர்வு நடத்தப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு இது இலகுவாக இருக்க வேண்டும் என்றும், அவர்களும் இந்த தேர்வு எழுதி பயன்பெற வேண்டும் என்பதற்காக இந்த தேர்வை தமிழில் நடத்த வேண்டும் என்று கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வைத்திருந்தார்.

முதலமைச்சரின் கோரிக்கைக்கு செவி சாய்த்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் தமிழில் தேர்வு நடத்தாலம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழில் சிஆர்பிஎஃப் தேர்வு - உள்துறை அமைச்சர் அமித் ஷா

ஒன்றிய அரசின் ஆயுதப்படை காவலர் பணிக்கு சுமார் 10,000 பேரை தேர்வு செய்ய அறிவிக்கை வெளியிடப்பட்டிருந்தது. ஆட்சேர்க்கைக்கான கணிதத் தேர்வு ஆங்கிலம், இந்தியில் மட்டும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ் உட்பட மாநில மொழிகளில் தேர்வு நடத்தாதது பாரபட்சமானது என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். தமிழில் தேர்வு நடத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின்-ன் கோரிக்கையை ஏற்க மறுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியானது.

தமிழில் சிஆர்பிஎஃப் தேர்வு - உள்துறை அமைச்சர் அமித் ஷா

முதலமைச்சரின் கோரிக்கையை இரண்டு நாட்களுக்கு முன்பு நிராகரித்த ஒன்றிய அரசு திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. தமிழ் மொழியிலும் தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் உட்பட 13 மொழிகளில் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு 2024 ஜனவரி 1 தேதி நடைபெற உள்ளது.

MUST READ