இந்தியாவில் உள்ள பருப்பு இருப்பு தகவல்களை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
பி.எஸ்.ராகவன் ஐ.ஏ.எஸ். காலமானார்!
அன்றாடம் பயன்படுத்தப்படும் பல்வேறு பருப்பு வகைகளின் விலை அதிகரிப்பைத் தடுப்பதற்காக மத்திய அரசு, பல்வேறு அறிவுரைகளை வழங்கியிருக்கிறது. அதன்படி, பருப்பு வகைகளின் இருப்பு விவரங்கள் தொடர்பாக, அவற்றை கையிருப்பில் வைத்திருக்கும் அனைத்து நிறுவனங்களும் வாராந்திர இருப்பு விவரத்தை வெளியிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் வருகிற 16ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!
அவற்றை மாநில அரசுகள் சரிபார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. பதுக்கல் மற்றும் சந்தை முறைகேடுகளைத் தடுக்க பருப்பு வகைகளின் கையிருப்பு நிலவரம் மற்றும் விலை நிலவரம் குறித்து கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.