Homeசெய்திகள்இந்தியாநம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஆகஸ்ட் 8- ஆம் தேதி விவாதம்!

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஆகஸ்ட் 8- ஆம் தேதி விவாதம்!

-

 

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம், வரும் ஆகஸ்ட் 8- ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களின் பேராதரவை பெற்ற போர் தொழில்….. ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம், தோல்வியைத் தழுவும் என்று நன்றாகத் தெரிந்த நிலையிலும் பிரதமரை நாடாளுமன்றத்தில் மணிப்பூர் குறித்து பேச வைக்கவே, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 8- ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்தப்படும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் முடிவுச் செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் விவாதம் நடைபெற்ற பிறகு, வரும் ஆகஸ்ட் 10- ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் விவாதத்திற்கு பதில் அளிப்பார் என மத்திய அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், மக்களவை அலுவல் குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்தனர். நம்பிக்கையில்லா தீர்மானத்தை மழைக்காலக் கூட்டத்தொடரின் இறுதி பாகத்தில் நடத்துவது சரியல்ல என மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

கார்த்தியின் ‘சர்தார் 2’ படத்தின் முக்கிய அப்டேட்!

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், பிற மசோதாக்கள் மீது விவாதம் நடத்துவது மரபு அல்ல என எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

MUST READ