இந்தியா தனது முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இந்த ஏவுகணை ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகமாக பறக்கும். 1,500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் வரை பல்வேறு பேலோடுகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, இந்தியாவின் பாதுகாப்பு திறன்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த சாதனை ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பம் கொண்ட நாடுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவில் இந்தியாவை இணைத்துள்ளது.
சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஹைப்பர்சோனிக்கை உருவாக்கி இருக்கும் நாடுகளின் ஒன்று இந்தியா. ஹைப்பர்சோனிக் ஏவுகணை சனிக்கிழமை மாலை 6.55 மணிக்கு ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து ‘வெற்றிகரமாக பறக்கும் சோதனை’ செய்யப்பட்டது. இது 1,500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு பல்வேறு பேலோடுகளை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை இராணுவத்தின் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படையில் பல மாற்றங்களுக்கு வழி வகுக்கும் கேம்சேஞ்சர் எனக் கொண்டாடப்படுகிறது. இது வரலாற்றில் கொண்டாடப்பட வேண்டிய தருணம். அற்புதமான சாதனை என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.