Homeசெய்திகள்இந்தியாடெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசு!

டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசு!

-

 

டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசு!
File Photo

டெல்லியில் தொடர்ச்சியாக காற்று மாசு அதிகரித்து வருவதால், பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்!

தலைநகர் டெல்லியில் ஒரு வாரத்திற்கு மேலாக, காற்று மாசு பாதிப்பு அதிகமாக உள்ளது. அதன் காரணமாக, வரும் டிசம்பர் 06- ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமான சார்ந்த பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தலைநகரின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 400 புள்ளிகளைத் தாண்டி பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பி.எஸ்.3 பெட்ரோல் மற்றும் பி.எஸ்.4 டீசல் வாகனங்கள் இயக்கவும், கனரக வாகனங்கள் நகருக்கு நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

காற்று மாசு அதிகரித்ததன் எதிரொலியாக, குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சுவாச பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனையை நோக்கிப் படையெடுப்போர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. நிலைமையை சமாளிக்க நகரின் முக்கிய பகுதிகளில், மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரைத் தெளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சாலையில் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் புகைமூட்டம் நிலவுவதால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் நிலவுகிறது.

MUST READ