டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில்தான் கடந்த 1949- ஆம் ஆண்டு இந்திய அரசமைப்பு சாசனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த 1956- ஆம் ஆண்டு நாடாளுமன்றக் கட்டிடத்தில் மேலும் இரண்டு தளங்கள் அமைக்கப்பட்டன. நேரு, அம்பேத்கர், வாஜ்பாய், சோம்நாத் சாட்டர்ஜி, ஜெய்பால் ரெட்டி என ஏராளமானோர் உரையாற்றியது இந்த நாடாளுமன்றம்.
“10 மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் ரத்து அபாயம்”- டாக்டர் ராமதாஸ் அறிக்கை!
ஜிம்மி கார்ட்டர், பராக் ஒபாமா உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் இங்கு உரையாற்றியுள்ளனர். கடந்த 2001- ஆம் ஆண்டு இங்கு நடந்த பயங்கரவாத தாக்குதல் நாட்டையே அதிர வைத்தது. சுமார் 100 ஆண்டு காலம் இந்தியாவின் ஆட்சி பீடமாக இருந்த கட்டிடத்திற்கு பதில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதுவரை பயன்பாட்டில் இருந்த நாடாளுமன்றக் கட்டிடம், கடந்த 1927- ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
கடந்த 1921- ஆம் ஆண்டு தொடங்கி, 1927- ஆம் ஆண்டு வரை கட்டப்பட்ட இக்கட்டிடத்தின் கட்டுமான செலவு ரூபாய் 83 லட்சம் ஆகும். ஆறு ஏக்கர் பரப்பில் வட்ட வடிவத்தில் அமைந்த கட்டிடத்திம் விட்டம் 560 அடியாகவும், உயரம் 27 அடியாகவும் உள்ளது. பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்திலேயே நாடாளுமன்றமாக இக்கட்டிடம் பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கவுன்சல் ஹவுஸ் என்றும், விடுதலைக்கு பின் பார்லிமெண்ட் ஹவுஸ் எனவும் பெயர் வைக்கப்பட்டது.
ஜப்பானில் புல்லட் ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம்!
கடந்த 1947- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14- ஆம் தேதி அன்று நள்ளிரவில் முதல் பிரதமர் நேரு சுதந்திர தின உரையாற்றிய கட்டிடம். 93 ஆண்டுகள் பழமையான கட்டிடம் என்பதால், போதிய வலிமை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.