தலைநகர் டெல்லியில் தமிழ் அறிஞர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்.
தமிழ்மொழியை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்கக்கோரியும், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரியும், திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திடக்கோரியும் தலைநகர் டெல்லியில் நாடாளுமன்றம் அருகே ஐந்தர் மந்தரில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
உலகத் தமிழ்க் கவிஞர்கள் கலை இலக்கியச் சங்கம் சார்பில் நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள் , புலவர்கள், டெல்லி தமிழ் சங்க பொதுச் செயலாளர் முகுந்தன் உள்ளிட்ட 133 – தமிழ் அறிஞர்களால் நடந்ததப்படும் உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் தொடங்கி வைத்தார்.
3 முக்கிய கோரிக்கைகளுடன் தமிழ் அறிஞர்களின் இந்த போராட்டம் நடைபெறுகிறது.
கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தான் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்தார். தற்போது முதலமைச்சர் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று கடிதம் எழுதி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இன்று போராட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள மூன்று கோரிக்கைகளும் விரைவில் நனவாகும். தமிழ்நாடு அரசு இந்த கோரிக்கைகள் நிறைவேற்ற என்றும் உறுதியாக தமிழ் அறிஞர்களுடன் இணைந்து போராடும் என்று தெரிவித்தார்.
கலையரசன் , போராட்டக்குழு அமைப்பாளர் :
தமிழ்மொழியை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்கக்கோரியும், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரியும், திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திடக்கோரியும் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறோம்.
குறிப்பாக உலக பொதுமறையான திருக்குறளை அனைத்து மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும், எனவே திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும், அவ்வாறு அறிவிக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றார்.