தண்ணீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரங்கள் குறித்து பிரதமரிடம் கோரிக்கை.
மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று பிரதமரிடம் டி.கே.சிவகுமார் கோரிக்கை.
மேகதாது அணை கட்டுவது தொடர்பாக தமிழ்நாடு அரசும் கர்நாடக அரசும் அமர்ந்து பேசி தீர்வு காண டி.கே. சிவகுமாருக்கு பிரதமர் அறிவுரை.
தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரில்லை – டி.கே. சிவகுமார். தற்போது காவிரியில் அளவுக்கு அதிகமாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் செல்கிறது – டி.கே. சிவகுமார்.
மத்திய பட்ஜெட்டில் கர்நாடகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது குறித்து பிரதமரிடம் புகார் அளித்தேன் . முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்காததால் பல திட்டங்கள் முடங்கும் என்றும் பிரதமரிடம் டி.கே. சிவகுமார் விளக்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.