![டீசல் பேருந்துகள் டெல்லியில் நுழையத் தடை!](https://www.apcnewstamil.com/wp-content/uploads/2023/10/1500x900_414541-dtcbus660x450101719052557-1.jpg)
காற்று மாசு அதிகரிப்பதைத் தடுக்க, டெல்லியில் டீசல் பேருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
‘மின்சார ரயில் சேவை நிறுத்தம்’- கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கம்!
உத்தரபிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பேருந்துகள் டெல்லிக்கு இயக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட பேருந்துகளில் டீசலை எரிப்பொருளாகப் பயன்படுத்தினால், டெல்லிக்குள் நுழைய அனுமதி கிடையாது என மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
இந்த தடை புதன்கிழமை முதல் அமலுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்கனவே டீசல் பேருந்துகளை அனுப்ப வேண்டாம் என தகவல் அளிக்கப்பட்டுள்ளதால், எரிவாயுவில் இருந்து இயங்கும் பேருந்துகள் மட்டுமே டெல்லிக்கு வருகின்றன.
ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு!
இந்த உத்தரவால் பிற மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரும் டீசல் பேருந்துகள் எல்லையிலேயே திரும்பிச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது.