ராகுல்காந்தி தகுதிநீக்கம்- உச்சநீதிமன்றத்தில் மனு
எம்பிக்கள், எம்எல்ஏக்களை தகுதி நீக்க செய்யும் மக்கள்
பிரதிநிதித்துவ சட்டப்பிரிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடிதை தவறாக பேசியதாக, பாஜக சார்பில் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் எம்பிக்கள், எம்எல்ஏக்களை தகுதி நீக்க செய்யும் மக்கள்
பிரதிநிதித்துவ சட்டப்பிரிவை எதிர்த்து கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆபா முரளிதரன் உச்சநீதிமன்றத்தில் பொதுநலமனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். தண்டனை விதிக்கப்பட்ட எடனே எம்பி பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் சட்டப்பிரிவை எதிர்த்து பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றங்களின் தன்மை மற்றும் தீவிரம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இதுபோன்று தகுதிநீக்கம் செய்யப்படுவதை எதிர்த்து பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.